உறையும் பனியிலும் உருகியது..!உன்னால் என் நெஞ்சம்..... உன் ஒரு பார்வையை போர்வையாக்கினால்..! -என் உயிர் இங்கே மிஞ்சும்.... உதகையின் காதலனுக்கு ஊர் போற்றும் வாலிபனுக்கு உனது கரம் கொடுப்பதற்கு.... உரிமை இருந்தும் தயக்கம் எதற்கு....? உறக்கம் வராமல் போனது! உன் நினைவால் உணவும் வேண்டாம் என்றானது.... உருட்டுகிறேன் என்று நினைக்காதே உண்மை காதல் உள்ளத்தில் தோன்றினால்- ஆல் இந்தியா ரேடியோ வில் அறிவிப்பாளராக இருப்பவனும் கூட ஊமையயாகி ஊனமாவான்....! ~ கார்கி