பல நாள் கனவே....... ஒரு நாள் அவளோடு படத்திற்கு செல்ல.... பல முறை பார்த்த படம் என்றாலும் அவளோடு பார்க்கும் போது அது எனக்கு முதல் முறை தான்.. மலையின் உச்சியில் கடவுளாய் இருந்தாலும்... காதலியை பார்க்க மலையை விட்டு இறங்க வேண்டும் என்று புரிந்தது..... 2 மணி நேரம் அவளை காண 20 மணிநேரம் செலவழித்தேன்..... எல்லாரும் படத்தை திரையில் பார்த்தார்கள்.... நான் மட்டும் அவள் விழி திரையை பார்த்தேன்..... முதல் பாதி மட்டும் தான் பார்த்தேன்... படம் மட்டுமல்ல.... அவள் முகமும் தான்....! அவளை பார்த்து விட்டு வந்தேன்...... உறக்கமே வரவில்லை... அவள் முகம் கண்களுக்குள்ளே இருந்ததால் உறக்கத்திற்கு விடுமுறை கொடுத்து விட்டேன்..... ~கார்கி