Skip to main content

அவளோடு திரைப்படம் பார்க்க...!

பல நாள் கனவே.......
ஒரு நாள் அவளோடு படத்திற்கு செல்ல....

பல முறை பார்த்த படம் என்றாலும்
அவளோடு பார்க்கும் போது
அது எனக்கு முதல் முறை தான்..

மலையின் உச்சியில் கடவுளாய் இருந்தாலும்...
காதலியை பார்க்க மலையை விட்டு இறங்க வேண்டும் என்று புரிந்தது.....

2 மணி நேரம் அவளை காண 
20 மணிநேரம் செலவழித்தேன்.....

எல்லாரும் படத்தை திரையில் பார்த்தார்கள்....
நான் மட்டும் அவள் விழி திரையை பார்த்தேன்.....

முதல் பாதி மட்டும் தான் பார்த்தேன்...
படம் மட்டுமல்ல....
அவள் முகமும் தான்....!



அவளை பார்த்து விட்டு வந்தேன்...... உறக்கமே வரவில்லை... அவள் முகம் கண்களுக்குள்ளே இருந்ததால் உறக்கத்திற்கு விடுமுறை கொடுத்து விட்டேன்.....


~கார்கி


 

Comments

Popular posts from this blog

உதகையின் காதலன்

உறையும் பனியிலும் உருகியது..!உன்னால் என் நெஞ்சம்.....                       உன் ஒரு பார்வையை  போர்வையாக்கினால்..! -என்                உயிர் இங்கே மிஞ்சும்.... உதகையின் காதலனுக்கு                  ஊர் போற்றும் வாலிபனுக்கு      உனது கரம் கொடுப்பதற்கு....      உரிமை இருந்தும் தயக்கம் எதற்கு....?  உறக்கம் வராமல் போனது!             உன் நினைவால்                        உணவும் வேண்டாம் என்றானது....   உருட்டுகிறேன் என்று நினைக்காதே உண்மை காதல்                              உள்ளத்தில் தோன்றினால்- ஆல் இந்தியா ரேடியோ வில் அறிவிப்பாளராக இருப்பவனும் கூட   ஊமையயாகி ஊனமாவான்....! ~ கார்கி

பல 'மை ' கண்ட சோழன்

கருமை  என்றார்கள்... வறுமை என்றார்கள்....! மேய்க்கலாம் நீ எருமை என்றார்கள்....! உவமை கொண்டு சிறுமையில் பேசினார்கள்....  உண்மை அறியாமலேயே ஒருமையில் பேசினார்கள்...... குரல் வளமை எம் வலிமை என அறிந்து..... பொறுமை இழக்காது.... கடமை மறக்காது.... திறமை கண்டோம்... ! ஏழ்மை வென்றோம்...... ~கார்கி.....